தமிழ்நாடு

மதுரையில் தேர்தல் தேதி மாற்றமா?

Will the election date change in Madurai?

சித்திரை திருவிழாவுக்காக மதுரையில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.ஏப்ரல் 18ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்கிறது. ஆனால் அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக இன்று ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிமுக, திமுக, பாஜக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, சித்திரைத் திருவிழாவின் போது, தேர்தலை சுமூகமாக நடத்துவது சாத்தியம் தான் என்று ஆட்சியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதை அடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். நீதிமன்றத்தை நாடப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker