மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. அந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.1664 கோடி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் மத்திய அரசு இதற்கான ஒப்புதல் அளித்தது.
நாட்டின் சிறந்த மருத்துவமனை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் செங்கல்பட்டுப், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த இடத்தை மத்திய அரசு தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது இறுதியில் மதுரை தோப்பூர் இடத்தில் அதற்கான வசதிகள் அனைத்தும் இருப்பதால் மத்திய அரசு தேர்வுக்குழு இந்த இடத்தை உறுதி செய்தன. இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான சிறப்பம்சங்கள் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதி, உயர்தரச் சிகிச்சை அரங்குகள் 100 மருத்துவப் படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை இடம் பெற உள்ளது. 15 முதல் 20 சிறப்புச் சிகிச்சை முறைகள் ஒரு நாளைக்கு 1500 புற்றுநோயாளிகள், 3000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மருத்துவமனையால் 17 மாவட்டங்களில் சுற்றியுள்ள சுமார் 3 கோடி மக்கள் பயனடைய உள்ளார்கள் எனத் மத்திய அரசு தெரிவிக்கிறது.