நீண்ட நாட்களாக மணல் விற்பனை செய்யாமல் இருந்த தமிழக அரசு தற்பொழுது அதற்கான இணையதளத்தையும் அதற்கான விலை மற்றும் நேரத்தையும் நிர்ணயித்து உள்ளது.
www.tnsant.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்து மணலைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு யூனிட்டின் விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டு, இரு பிரிவுகளாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 1வது பிரிவு காலை 8 முதல் 2 மணி வரையிலும் 2வது பிரிவு 2 முதல் 5 மணி வரை என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் காலை 8 முதல் 2 மணி வரையிலும்¸ லாரி உரிமையாளர்கள் 2 முதல் 5 மணி வரை என ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16 லாரி குவாரிகள்¸ 21 மாட்டு வண்டி குவாரிகள் இயங்கி வருகின்றது.