மேற்கு வங்கத்தில் காவல் துறை ஆணையர் ராஜிவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்து இருந்தார். அவருக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கு வங்கத்தில் சாரதா, ரோஸ் வேலி நிறுவனங்கள் நிதி மோசடி செய்ததாகவும் அதில் காவல் துறை ஆணையர் ராஜிவ் குமார் சாரதா மற்றும் ரோஸ் வேலி நிருவனங்களுக்கு ஆதரவாக செயல் பட்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. காவல் துறை ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை அங்குள்ள காவல் துறையினர் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி கைது செய்து பின்பு விடுவித்தாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி காவல் துறை ஆணையர் ராஜிவ் குமாரை கைது செய்ய கூடாது எனவும், அவர் ஷுல்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார். இதனை வரவேற்று உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார்.