போராடி சரணடைந்தது இந்தியா

தொடரை யாருக்கு என தீர்மானிக்கும் 3 வது டி20 போட்டியானது நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் துவக்க பேட்ஸ்மென்கள் செய்ஃபர்ட் மற்றும் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

பவர்ப்ளே முடியும் வரை இந்திய பந்து வீச்சாளர்களால் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை.3 சிக்ஸர்கல்,3 பவுண்டரிகள் உடன் 25 பந்துகளில் 43 ரன்கள் அடித்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ச செய்ஃபர்ட் குள்தீப் யாதவ் பந்த் வீச்சில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதன் பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 21 பந்துகளில் 27 ரன்கள் அடித்து கலில் அஹமது பந்து வீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு புறம் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை விளாசி தள்ளிய முன்ரோ 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 40 பந்துகளில் 72 ரன்கள் அடித்து கலீல் அஹமது பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கிராண்ட்ஹோம் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து புவனேஷ்குமார் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்செல் 19 ரன்களுடனும் ரோஸ் டெய்லர் 14 ரன்களிலும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் மட்டும் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. துவக்க வீரர் தவான் 5 ரன்களில் சான்டர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.

ரோஹித் ஷர்மா ஒருபுறம் தடுமாறி கொண்டு இருக்க தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றொரு புறத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.28 பந்துகளில் 43 ரன்கள் அடித்த விஜய் சங்கர்  சாண்டர் பந்து வீச்சில் கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் களம் இறங்கிய ரிஷப் பாண்ட்  தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின் ரோஹித் ஷர்மா 38 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 21 ரன்களிலும், தோனி 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளிக்க ஆட்டம் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. அதன் பின் இணைந்த தினேஷ் கார்த்திக், கருணல் பாண்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்களுடன்  16 பந்துகளில் 33 ரன்கள் அடித்தும்,கருணல் பாண்டியா 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்தும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் 2_1 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி. ஆட்ட நாயகன் விருதை 72 ரன்கள் அடித்த முண்ரோவும், தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து விக்கெட் கீப்பர் செய்ஃபர்ட்ம் பெற்றனர்.தொடர்ச்சியாக 10 டி20 தொடர்களில் தோல்வியை சந்திக்காத இந்திய அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *