ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ ஜியோ” தற்பொழுது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போரட்டம் நடத்தி வருகிறார்கள்.
கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் டிசம்பர் 4-ம் தேதி முதல் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை அரசுப் பேச்சுவார்த்தை நடத்தியது.
தமிழக அரசு சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
தங்களது அடுத்த நிலைகுறித்து விவாதிக்க இன்று ஜாக்டோ ஜியோ தனது கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இறுதி முடிவு இன்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது.