இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஓடியும். நமது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இன்னும் கூட தீர்க்கப்படவில்லை. அந்த அந்த மாநிலத்தில் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு¸ எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு இதுதான் அவர்களின் அரசியல். இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க எந்த மத்திய அரசும் வரவில்லை. ஏனென்றால் பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர்களுக்கு பொழப்பு இல்லை அல்லவா? அதுதான் நிதர்சன உண்மை¸ மத்திய அரசால் ஒரு நாள் இரவில் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்ல முடியும்¸ நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அதாவது (GST) கொண்டு வர முடியும்¸ நீட் கொண்டு வர முடியும்¸ நாட்டையே லாக்டவுன் பண்ண முடியும். காங்கிரஸ் காலத்தில் எத்தனை மாநில அரசுகள் டெல்லியில் உட்கார்ந்து மக்களால் தேர்ந்தெடுத்த அரசுகளை கலைக்க முடியும். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால்¸ மாநிலப் பிரச்சினைகளை மட்டும் தீர்க்க முடியாது. இந்திய நீதித்துறை வந்து எவ்வளவு நாளாகிறது. அவர்களது பிரச்சினைகளை தீர்த்து விட்டார்களா? என்றால் கிடையாது அவர்களுக்கு இந்த பிரச்சினை தெரியாத மாதிரி கண்ணை மூடிய பூனைகள் போல் அல்லவா இருக்கிறார்கள்.

நாட்டுக்குள் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தால் நாம் எவ்வாறு முன்னேற முடியும். ஒரு மாநிலம் தண்ணியால் மூழ்கிறது. ஒரு மாநிலத்தில் தண்ணியே இல்லை இதுதான் இந்தியா.

இந்தியாவில் எந்த வளமும் இல்லாமல் இல்லை. ஆனால் எந்த வளத்தையும் பொது மக்கள் அனுபவிப்பது இல்லை¸ கட்டுரைக்கு வருவோம். கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் எதிர்கட்சியாக தற்பொழுது உள்ளது. பா.ஜ.க-வின் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். அங்கு எதிர் கட்சியாக உள்ள காங்கிரஸ் அரசியல் சித்து விளையாட்டை ஆரம்பித்து உள்ளது. அதாவது மேகதாது அணை குறுக்கே அணைக்கட்ட சொல்லி பாதயாத்திரை செல்ல உள்ளார் சித்தராமையா¸ தனது சொந்த நலனுக்காக அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவரான சித்தராமையா மக்களை முட்டாளாக்க பாதயாத்திரை செல்கிறார். இதன் மூலம் அரசியல் அறுவடை செய்யப்போகிறார். தாங்கள் ஆட்சி மத்தியிலும்¸ மாநிலத்திலும் இருந்த போது தீர்க்க வேண்டியது தானே சித்தராமையா அவர்களே¸ தீர்க்க மாட்டீர்கள் ஏனென்றால் மக்கள் பிரச்சினை அல்லவா¸ தீர்ந்து விட்டால் உங்கள் பொழப்பு என்னாவது. காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்திக்கு தெரியாத இந்த பிரச்சினைகள் இதை தீர்க்க எந்த முயற்சியாவது மேற்கொண்டாரா என்றால் இல்லை. மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தால் இவர்களுக்கு தூக்கம் வராது ஏனென்றால் வலுவான தேசிய தலைவர்கள் இல்லாததும் ஒரு காரணம். பாத யாத்திரை மூலம் தமிழக¸ கர்நாடக எல்லையோர மக்களிடையே பதற்றம் ஏற்படும் என தெரியாதா காங்கிரசுக்கு, பொழப்பற்ற அரசியல்வாதிகள்.