பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வக்கிரப்புத்தி கொண்ட அரக்கர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி இடம் இருந்து சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், இந்த வன்கொடுமை செய்த குற்றவாளிக்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் இவ்வகையான பாதிப்புகள், பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை மிகவும் கவலை அடைய செய்வதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 044-2855155, 044-28592750 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் மாநில மகளிர் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
பொள்ளாட்சி விவகாரம் குறித்து மாநில மகளிர் ஆணையம்
