பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம், தினகரன் அறிவிப்பு

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் நிருபனர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் மக்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

துரோகிகளின் கையில் அம்மாவின் கட்சி உள்ளது. தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத போது அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் தான். இந்த தேர்தலில் மக்கள் புதிய கணக்கை எழுதுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

மேலும் டிடிவி தினகரன் அவர்கள் பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மார்ச் 15 – ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *