பொருளாதார ரீதியில் எதிர்காலம் இல்லையா?

கடந்த மாத இறுதியில் வியட்னாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்த சந்திப்பு எந்த வித முடிவையும் எட்டாமல் முடிந்தது. இது குறித்து கருத்து கூறிய வடகொரியா தாங்கள் பாதியளவு பொருளாதார தடைகளை நீக்க கூறியதாகவும் அதற்கு மறுத்தால் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை எனவும் கூறியது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து வடகொரியா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டால் பொருளாதார வளர்ச்சியை அடையும். மாறாக தொடர்ந்து அணு ஆயுதங்களை வைத்து இருந்தால் வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியில் எதிர்காலம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *