கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

விராத்கோலி தனது கேப்டன் பதவியை தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு ரோகித்சர்மா நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கோலி கிரிக்கெட் வாரியம் தனக்கு முன்கூட்டியே சொல்லவில்லை எனவும்¸ விலக வேண்டாம் என்று எந்த அறிவுரையும் கூறவில்லை என அவர் கூறினார். அதற்கு கங்குலி தாங்கள் கூறினோம் கோலி ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறினார். இங்கு இருந்துதான் சர்ச்சை ஆரம்பித்தது. கங்குலி ரசிகர்களும்¸ கோலி ரசிகர்களுக்கும் இடையே கருத்து மோதலை சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்தனர். என்னதான் நடந்தது T20 உலக கோப்பைக்கு முன்பாக கோலிதான் இந்த தொடர் உடன் விலகப் போவதாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படி விலகினாலும் உலக கோப்பை முடிந்தவுடன் அறிவிக்க வேண்டியதுதானே இப்படி திடீர் அறிவிப்பால் இந்திய அணியில் குழப்பம் ஏற்படாதா¸ இந்த குறைந்த பட்ச யோசனைக்கூடவா அவருக்கு இருக்காது. பதவி வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் பிறகு ஏன் குறை கூறுகிறார் என்று கேட்கிறிர்களா ஒரு நாள் போட்டிக்கு மட்டும் தான் கோலி கேப்டனாக இருக்க விரும்பியது உண்மை. ஆனால்¸ கிரிக்கெட் வாரியம் T20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ரோகித்சர்மாவை கேப்டனாக்கியது. தான் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவோம் என கோலி உணரவில்லை¸ அதனால் ஏற்பட்ட கோபமே கிரிக்கெட் வாரியம் மீது மறைமுகமாக குற்றம் சாட்டி உள்ளார்.

எல்லா நேரமும் தனக்கு சாதகமாக அமையும் என நினைத்தார் கோலி. நடக்கவில்லை என்றதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கங்குலி கூறியது உண்மையா என்றால் உண்மைதான். ஆனால் அவர் தனது அனுபவத்தை பயன்படுத்தி விளக்கமாக கூற வேண்டிய விவரங்களை சுறுக்கமாக கூறி விட்டு நகர்ந்து விட்டார். ஆதலால்தான் இந்த குழப்பம் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அந்த பதவிக்கு தகுந்தவாறு நடந்து கொண்டால் இந்த சர்ச்சைகள் வராது.