சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக இருந்த பொன்.மாணிக்கவேல் அவர்கள் நவம்பர் 30-ல் பணி ஒய்வு பெற்றார். ஆனால் உயர்நீதிமன்றம் அவரது பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆணையிட்டது.
இந்தப் பணிநீட்டிப்பு ஆணையை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொன் மாணிக்கவேல் பணியில் நீடிப்பார் என்றும் பணிநியமனத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.