பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு 75% இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயக்கம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2¸100 பேருந்துகளுடன்¸ 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10¸300 பேருந்துகளும்¸  பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6¸468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16¸768 பேருந்துகள் இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி¸ நாசரத்பேட்டை¸ வெளிச் சுற்றுச்சாலை (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து¸ ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று¸ தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்

கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும்

MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் 01 மையம் செயல்படும். ஆக மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் உள்ளன.

முன்பதிவு

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் வசதிக்காக 24 x 7 கட்டுப்பாட்டு அறை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *