
போயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்!
மென்பொருள் கோளாறு காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வேலை செய்யாததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் லயன் ஏர் மற்றும் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்தை சந்தித்து 351 இறந்து போனதற்கும் இந்த தொழில்நுட்ப கோளாறுதான் காரணம்.
எனவே, இந்த போயிங் விமானங்கள், வாசிங்டனில் உள்ள போயிங்கின் ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானங்களை நிறுத்துமிடம் முழுமையடைந்ததால், அந்த நிறுவனம் தன் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சில விமானங்களை நிறுத்தியுள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏவியேசன் போட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘விமான போக்குவரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு’ என்று கூறியுள்ளது. இந்த புகைப்படம், விமானம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக பல விமானங்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.