பேட்ட விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பின் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ரஜினி படமாக வெளிவந்து இருக்கும் படம்தான் பேட்ட.

ஊட்டியில்  உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு புது வார்டன் ஆக வருகிறார் ரஜினி. அதன் பின் அடாவடித்தனமான மாணவர்கள் இருக்கும் அந்த ஹாஸ்டலில் நடைபெறும் தவறுகளை ஒவொன்றாகச் சரி செய்கிறார் ரஜினி. இந்நிலையில் ஹாஸ்டல் மாணவன் அன்வரை கொலை செய்ய ஒரு கும்பல் வருகிறது. கும்பல் வர என்ன காரணம், ஹாஸ்டல் வார்டன் ஆக வரும் முன் ரஜினி என்ன செய்து கொண்டு இருந்தார்? அன்வரை ரஜினி காப்பாற்றினாரா? எனச் சுவாரசியமாகப் பயணிக்கிறது படத்தின் கதை.

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜும் ரஜினி ரசிகர்களுக்கே உரித்தான பாணியில் திரைக்கதையை வடிவமைத்து உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தும் முற்றிலும் தனக்கு சாதகமான பிட்சில் புகுந்து விளையாடி உள்ளார்.இதில் அனிருத்தின் ரணகள படுத்தும் பின்னணி இசையும், அமர்க்களமான பாடல்களும் படத்தை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.

ரஜினி சிம்ரன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் மனதை வருடுகின்றன. பாபி சிம்ஹா, சசிகுமார் இருவரும் கதைக்குத் தேவையான கனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நாவசுதினும் தன் பங்க்கு மிரட்டி உள்ளார். இத்தனை களேபிரங்களுக்கு மத்தியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் கவனத்தை ஈர்க்கிறார் விஜய் சேதுபதி.

ரஜினியின் மனைவியாக வரும் திரிஷாவும் ஸ்கோர் செய்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசும் தன் பணியைப் பிரமாதமாகவே செய்து உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் ரஜினி தன் பழைய ஸ்டைலில் பேட்ட வேலனகா முழு பலத்துடன் மிரட்டி அசத்தி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *