சென்னையில் நேற்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை குழு சார்பில் டாக்டர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த விழிப்புணர்வில் டாக்டர் ஜெயந்தி இந்தியாவில் 50 லட்சம் பேர் செவித்திறன் குறைபாடு மற்றும் 19 லட்சம் பேர் பேச்சு திறன் குறைபாடு உடையவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்புப் பயிற்சிகள் கொடுத்துவருகின்றனர் என்றார்.