இந்திய வீரர் அபினந்தன் இன்று வாகா எல்லையில் விடுதலை செய்யபட உள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கான முதல்படியாக இந்திய வீரரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவேன் எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவபிடியில் உள்ள அபினந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கபடுகிறார்.
பேச்சுவார்த்தைக்கு தயார் – இம்ரான்கான்
