சென்னையின் தண்ணீர் பஞ்சம்’.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு “இந்த நிலையிலிருந்து சென்னையை மழையினால் மட்டுமே காப்பாற்ற முடியும்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், தண்ணீர் இல்லாத இந்த நகரை, காலியான கிணற்றுடன் ஒப்பிட்டுள்ளார் டிகாப்ரியோ.
“முக்கிய நான்கு நீராதாரங்களும் வற்றிப்போனதால், இந்த தெனிந்திய நகரம் மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் மக்கள் வீதிகளில் தண்ணீருக்கான பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்னையால் பல வனிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அந்த நகரமே தண்ணீருக்காக வேறு வழிகளை தேடி வருகிறது. ஆனால், அந்த நகரம் மழைக்காத்தான் வேண்ட வேண்டும்.”, என அவர் குறிப்பிட்டிருந்தார்.