நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 73.29 காசும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 68.14 காசும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகப் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது மீண்டும் ஏறுமுகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.