சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜெத்தேசால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தில் நேற்று பற்றிய இந்த காட்டுத்தீ இன்று காலை முதல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. மேலும், 50 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதால் அரியவகை மரங்கள் சேதமடைந்ததாகவும், 1000 க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
