பும்ரா பதிலடி?

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்யூர் ஜாவித் பும்ரா வீரரின் பந்துவீச்சு முறை குறித்து விமர்சனம் செய்திருந்தார். இவ்வாறு அவர் தொடர்ந்து பந்து வீசினால் உடலில் காயம் ஏற்படும் எனத் தெரிவித்து இருந்தார். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிப் பும்ராவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலடி கொடுத்த பும்ரா எனக்கு எது ஒத்து வரும், ஒத்துவராது என எனக்குத் தெரியும். பிறர் என்னைக் குறை கூறுபவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. கிரிக்கெட்டில் சிறந்த ஸ்டைல் பந்துவீச்சு முறை என்று எதுவுமில்லை. எனது உடலை பாதுகாக்க நான் சிறப்புக் கவனம் செலுத்துகிறேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த பும்ரா நான் அங்குள்ள ஆடுகளை இதுவரை பார்க்கவில்லை. அதைப் பற்றி நான் இப்பொழுது சிந்திக்கவில்லை. தற்சமயம் உள்ள தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற பிறகுதான் அது குறித்து யோசிக்க முடியும். அதன்பிறகு செயல்பட முடியும். பந்துவீச்சாளர் உடன் அது குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டு உள்ளேன். என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என எனக்குத் தெரியும். தேவையான ஓய்வு எடுத்தால் தான் உடல் நிலை சீராக வைத்துக் கொள்ள முடியும். விக்கெட் பசி அப்பதான் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *