புத்தக வடிவில் டாடா

உலகின் முன்னனி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தக வடிவில் வரவுள்ளது. அவரது ஆரம்ப கால வாழ்க்கை முதல் தற்போதைய காலம் வரை அச்சு வடிவில் வரவுள்ளது.

ரத்தன் டாடாவின் சுயசரிதை புத்தக வடிவில் வர உள்ள நிலையில் பதிப்பக உரிமை, உலக அளவில் ஏலம் விடப்பட்டது. அவற்றில் உலகின் பல முன்னனி பதிப்பக நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் இங்கிலாந்தை தலைமயமாக கொண்ட ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் ஏலத்தில் எடுத்து உள்ளது. அதன் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது. ரத்தன் டாடாவின் வாழ்க்கை பல திருப்பங்களையும்¸ ஏற்ற இறக்கங்களையும் கொண்டது என்பதால் எதிர்ப்பார்வை உருவாகி உள்ளது. கூடிய விரைவில் அச்சு வேலை முடிந்தவுடன் இந்த வருட மத்தியில் புத்தக வடிவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *