மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்க சிறப்பு சட்டபேரவை கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் இல்லாமல் காவிரி நீரை நம்பியுள்ள புதுச்சேரி, காரைக்கால் மாவட்டமும் பாதிப்படையும் என்பதை வலியுறுத்தி மேகதாது அணை ஆய்வு பணி மேற்கொள்ள மத்திய அரசு அளித்த முதற்கட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக தரப்பில் மனு அளித்திருந்தனர். இதற்கான சட்டப்பேரவை கூட்டம் நாளை கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்திருக்கிறார்.