புதிய மத்திய அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்ற ராஜ்நாத் சிங்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 மத்திய அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக நேற்று வெளிவந்த தகவலை தொடர்ந்து, பெரும் சர்ச்சைகள் எழுந்தன.இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் தகவில்கள் வெளியாகின. எனினும், ராஜ்நாத் சிங் அலுவலகம் அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மோடி அரசு அமைத்துள்ள 8 மத்திய அமைச்சரவைக் குழுக்களில், 6 குழுக்களில் ராஜ்நாத் சிங் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கிறார். பிரதமர் மோடி 6 குழுக்களில் உள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களில் உள்ளார். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் 5 மத்தியக் குழுக்களில் இடம் பிடித்துள்ளார். ஆனால், ராணுவத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், வெறும் 2 குழுக்களில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருப்பதாக பார்க்கப்படும் ராஜ்நாத் சிங் இவாறு முக்கிய அமைச்சரவை குழுக்களில் இருந்து விளக்கப்படுள்ளது விவாத பெருளாக மாறியது
இதை தொடர்ந்து அமைச்சரவை குழிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேலும் 4 குழுக்களில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *