
புதின் காதல் சர்ச்சை
புதின் இந்தபெயர் பல சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தமானது ஏனென்றால் ரஷ்யா என்றாலே மர்மங்கள் நிறைந்த நாடு. அதன் அதிபர் என்றால் அதைவிட மர்மம், சர்ச்சை இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு உலகம் வியந்து பார்க்கும் நாடு.
ரஷ்யா முடிந்து விட்டது என்ற நேரத்தில் ரஷ்யாவின் அதிபராகித் திறம்பட வழிநடத்தி வருபவர் புதின் அவரைப்பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தொகுப்பு இது அவர் பலமுறை சொல்லியுள்ளார் எனக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அவற்றின் உள் வர எண்ணாதீர்கள் எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனால் உலகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்து விட்டது என்பது உண்மை தனது முதல் காதல் மனைவியை 2014-ஆம் ஆண்டு விவகாரத்துச் செய்தார். அதற்க்கு காரணம் ஜிம்னாஸ்டிக் வீரங்கனை அலினா கபேவா மீதான உறவு தான் என்று வதந்தி பரவியது.
இவர் இருவருக்கும் இடையிலான தொடர்பு பத்து வருடங்கள் என்பதும் இடையில் முதல் மனைவியின் கெடுபிடி காரணமாக விட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
புதின் காதலி 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிபிக்கில் தங்கமும், 2000-ஆம் ஆண்டு சிட்னியில் வெண்கலமும் ஜிம்னாடிக்சில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்குள் எவ்வாறு காதல் உருவானது 2008-ஆம் ஆண்டு வாக்கில் இருவரும் சந்தித்தார்கள் என்று ஒரு தகவல் தருகிறது. 2014-ஆம் ஆண்டு இருவரும் மோதிரம் மாத்தி கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
கடந்த அதிபர்கான தேர்தலில் அவர் வாக்களிக்க வந்தார் அப்பொழுது அவரது விரலில் திருமண மோதிரம் அணிந்து இருந்தார் அப்பொழுது தேர்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்குக் கண்டிப்பாகப் புதின் வெற்றி பெருவார் எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
முதல் மனைவி விவகாரத்து செய்த உடன் வெளிப்படையாக ரஷ்யமாளிகை செய்தி தொடர்பு தலைமை அதிகாரியாக தனது காதலியை நியமித்தார்.
புதினுக்கும் அவரது காதலிக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், இரண்டு குழந்தைகளும் புதின் போன்ற முகத்தோற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2015-ஆம் ஆண்டுப் பெண் குழந்தை பிறந்தாகவும் கூறப்படுக்கிறது. எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை.
அது குறித்துக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த புதின் அவர்கள் தற்பொழுது சூதகமாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதாவது விரைவில் தனது திருமணம் நடைபெறும் எனவும். அவர் மிகவும் மதிப்பிற்குரிய நபர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விரைவில் தனது காதலியை பகிரங்கமாக திருமணம் செய்து வெளி உலகிற்கு காட்டவுள்ளார் என்பது உண்மை.