பிகாரில் முஸாஃபர் நகரில் மூளைக்காய்ச்சல் காரணமாக 48 மணி நேரத்தில் 38 குழந்தைகைகள் இறந்துள்ளன சுமார் 133 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த இறப்பு குறித்த காரணங்கள் ஹைபோக்ளேசெமியா ஏன்ற நோயே காரணம் என்கின்றனர். ரத்தத்தில் சக்கரையின் அளவு குறைவினால் இந்த இறப்பு நடந்துள்ளது
கோடைக் காலங்களில் இந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கம் குறிப்பாக 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு காரணம் மக்களிடம் இந்த நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே காரணம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸாஃபர்நகரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.