பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்!!!

சூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

749 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம். ஒரு மாதத்திற்கான 50MBPS வேகத்துடன் வரவுள்ள இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300GB டேட்டாவையும் வழங்கவுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டேட்டாவுடன் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கவுள்ளது. இதன் மூலம், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ், டிவி நிகழ்ச்சிகள், படங்கள், விளையாட்டுகளின் நேரலைகள் என அனைத்தையும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.

தற்போது, ஹாட்ஸ்டார் உலக கோப்பை போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ள இந்த ஒளிபரப்பு ஹாட்ஸடார் பிரீமியம் இருந்தாலே பார்க்க முடியும். இந்த திட்டத்தின்மூலம், உலக கோப்பை போட்டிகளை ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.

இந்த ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கவுள்ள பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம், நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தை பெற 18003451500 என்ற இலவச எண்ணிற்கு அழைப்பு விடுத்து, இந்த திட்டத்திற்கான வேண்டுகோளை முன் வைக்கலாம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *