பிளிப்கார்ட் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்டது.இந்த நிறுவனத்தைப் பின்னிப் பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்தார்கள். முதலில் புத்தகங்கள் விற்பனையில் ஆர்வம் காட்டிய நிறுவனம் போகபோக தனது வியபாரத்தை எல்க்ட்ரானிக், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தகத்தில் 39.5% இவர்களது பங்களிப்பு ஆகும்.
இதன் இன்றைய சொத்துமதிப்பு 199 பில்லியன் ஆகும். ஏறக்குரைய அமெரிக்க டாலரில் 2.8 பில்லியன் ஆகும். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 30,000ஆகும். தனக்கு போட்டியாக இருந்த நிறுவனங்களை விலைக்கு வாங்கியும் மற்றவர்களை வியபார நுட்பத்தின் மூலம் தொழிலை விட்டே விரட்டினார்கள் இதன் மூலம் தனது வர்த்தக சாம்ராஜியத்தை விரிவுப்படுத்தினார்கள்.
2014-ல் மொட்ரோலா உடன் இவர்கள் ஏற்படுத்திய ஓப்பந்தம் மிகுந்த வருவாயை ஈட்டிதந்தது.இதனால் மொட்ரோலா போன்கள் வெளிசந்தையில் வெளிவருவது நிறுத்தப்பட்டது. அதன் பெருமை முழுவதும் பிளிப்கார்ட்யை சேரும்.
இதன்பிறகே நிறைய ஆன்லை போன் விற்பனை சூடுபிடித்தது. தீபாவளி பண்டிகை நேரங்களில் ஆப்பர் என்ற பெயரில் இவர்கள் வியபாரம் செய்வதே வித்தியாசமானது. இதன் மூலம் பலகோடி ரூபாய்களை அள்ளினார்கள்.
இப்படியாகத் தனக்கு போட்டியாக வந்த பல நிறுவனங்களை நேர்மையற்ற தொழில் யுக்திகள் மூலம் வெளியீற்றினார்கள்.
ஆனால் “வல்லவனுக்கு வல்லவன் உண்டு” என்பது போல நாளுக்கு நாள் பிளிப்கார்ட் மீது புகார்கள் அதிகமானது.
வால்மார்ட் பிளிப்கார்ட்டை வாங்கவேண்டிய அவசியமென்ன?
இந்த நிலையில் உலக வர்த்தக நிறுவனங்கள் இந்தியா மீது கண்வைத்தது. ஏனென்றால் உலகிலேயே அதிக நுகர்வோர்கள் கொண்ட நாடு என்பாதல் இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க தொழில் வல்லரசுகளான வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் விரும்பின.
இந்தியாவில் நேரிடையாக வால்மார்ட் வரமுயன்றது. வால்மார்ட் இந்தியாவில் உள்ள கட்சிகளின் கடும் எதிர்ப்பால் எரிச்சல் அடைந்தது. தனது வியாபார உத்திக்கு அடிப்படைத்தளம் தேவை என்பதை நன்கு உணர்ந்து இருந்தது. எனவே இங்கு நன்கு காலுன்றிய நிறுவனங்களை இணைத்துக் கொண்டால் எளிதாக இருக்கும் என அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது அந்த நேரத்தில் பிளிப்கார்ட் சிக்கியது
அவர்கள் வந்தால் தங்கள் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்த பிளிப்கார்ட் நிறுவனத்தை விற்க அமேசான், வால்மார்ட்டூடன் பேரம் பேசினார்கள். இறுதியில் இந்தவியபார பந்தயத்தில் வால்மார்ட் வெற்றி பெற்றது.2018 மே மாதம் 4-ம் தேதி வால்மார்ட் வசமானது.2018 மே 9-ம் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது. அவற்றின் 77% சதவீத பங்குகள் வால்மார்டிடம் சென்றது. இதன் மூலம் அதிகாரம் முழுவதும் மேக்மில்லனிடம் சென்றது.
யார் இந்த மேக் மில்லன்
மேக் மில்லன் தான் தற்பொழுது உலகமுழுவதுமான வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் தலைவரும் ஆவார்.
2014 –ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டின் ஐந்தாவது தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இவருக்குதான் பின்னிப் பன்சால் மூலம் பாதிக்கப்பட்ட பெண் மின்னஞ்சல்மூலம் தொடர்ப்பு கொண்டு உள்ளார்.
யார் அந்தப் பெண்
அவர் முன்னால் பிளிப்கார்ட்டின் ஊழியர் ஆவார்.இவருக்குப் பின்னிப் பன்சலால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேக் மில்லன் அவரது புகார்களை வரிசைப்படுத்தி விசாரணைக் குழு அமைத்தார்.
விசாரணைக் குழுவின் பதிலென்ன?
விசாரணைக்குத் தொடக்கதிலிருந்து இறுதிவரை நடத்தவற்றை பட்டியிலிட்டு வரிசைப்படுத்தி உள்ளது. அவற்றில் பன்சலால் மீது வெளிப்படத்தன்மை குறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேக் மில்லன் நேர்யிடையாகத் தலையிட்டுப் பதவி விலகக் கூறியுள்ளார். ஆதலால் வேறு வழி இல்லமால் பன்சலால் தலைமை பொறுப்பிலிருந்து விலகி உள்ளார். ஆனால் கம்பனி பொறுப்பில் தொடர்வர் என அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட்டிற்கு ஏதாவது பதிப்பு உண்டா இல்லையா?
தற்பொழுதைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை ஏனென்றால் புதிய தலைமயதிகாரியாகக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தங்களது தொழில் முறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனத் தெளிவுப்படுத்தி உள்ளார். அனைத்து ஊழியர்களுடனும் மின்னஞ்சல் தொடர்பு கொண்டு உள்ளதாகவும். நீண்ட நாளைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கம்பெனியின் வளர்ச்சிக்கு எதிர்காலத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனம் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நேரிடையாகத் தனது தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்
பிளிப்கார்ட்டின் எதிர்காலத்தைக் காலம்தான் பதில் சொல்லும்…