பிளஸ் -1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது.06.03.2019 அன்று தொடங்கும் தேர்வு 22.03.2019 அன்று முடிவடைகிறது.தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 914 மையங்களில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்களும், புதுச்சேரியில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 985 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.மாற்றுதிறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *