உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். கங்கை யாத்திரை என்ற பெயரில் 3 நாட்கள் 140 கிலோ மீட்டர் தூரம் பிரியங்கா பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜின் மனையா காட் என்ற இடத்தில் இருந்து வாரணாசியின் ஆசிகாட் வரை அவர் பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி பிரயாக்ராஜ் வந்த பிரியங்கா, ஆஞ்சநேயர் கோவில் மற்றும் திரிவேணி சங்கமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் படகு மூலம் அவர் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
பிரியங்கா காந்தி பிரச்சார பயணம்?
