இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் ,சலுகைகளும் இடம் பெற்று இருந்தன. இதில் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும், பிரதம மந்திரி வேளாண் உதவி நிதித் திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் அமைப்புசாரா பணியாளர்களில் 60 வயதுக்கு மேல் பட்டவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.