உலக நம்பர் 1 வீரர் டிஜோகோவிக் நவம்பரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸில் கலந்து கொள்ள விசா அப்ளை செய்கிறார்.
நவம்பர் 18-ல் விசாவை ஆஸ்திரேலியா அரசு அனுமதி வழங்கியது.
டிசம்பர் 22-ல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதில் நெகடிவ் என வருகிறது.
டிசம்பர் 30-ல் ஆஸ்திரேலியா அரசால் சிறப்பு சலுகையின் மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதி வழங்கப்பட்டது.
ஜனவரி 1¸ 2022-ல் குவாரண்டை இல்லாத சிறப்பு சலுகை மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுகிறார்.
ஜனவரி 2-ல் என்ட்ரீ பர்மீட்-க்கு ஆஸ்திரேலியா அரசால் அனுமதிக்கப்படுகிறது.
ஜனவரி 4-ல் பிரான்சில் இருந்து ஆஸ்திரேலியா புறப்படுகிறார் டிஜோகோவிக். அதாவது சிறப்பு சலுகை மூலம் தான் ஆஸ்திரேலியா செல்வதாக டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

ஜனவரி 5 இரவில் ஆஸ்திரேலியா நுழைகிறார்¸ அங்கு தடுக்கப்பட்டு விசா கேன்சல் ஆனதாக சொல்கிறார்கள்.
டிஜோகோவிக் கோர்ட்டில் முறையீடு செய்கிறார். அதில் தனது தரப்பு நியாயங்களை 11 டாக்குமெண்ட்டாக சப்மிட் செய்கிறார். இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட நீதிமன்றம் ஆஸ்திரேலியா அரசின் விசா தடையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.