கடந்த சில நாட்களாக அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும்நிலையில், அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றது போன்ற புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
புதியதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய மத்திய அமைச்சரவை நாளை பதவியேற்கு உள்ள நிலையில் அருண் ஜெட்லி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எழுதியுள்ள கடிதத்தின் நகலை அவரது டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார். அதில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய அமைச்சரவையில் தான் தொடர விரும்பவில்லை என்றும், தொடர்ந்து ஒய்வெடுக்க விரும்புவதால் தனக்கு எந்த பொறுப்புகளும் வழங்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.