இந்தியா

பியூஸ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் விவரம்

Interim budget details

இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் ,சலுகைகளும் இடம் பெற்று இருந்தன. இதில் இரயில்வே துறைக்கு மொத்தமாக 64587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.இராணுவத்திற்கு 3 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.

ஆயுஷ்மான்  பாரத் திட்டத்திற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.தனி நபர் வருமான வரிவிலக்கு ரூபாய் 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உச்ச வரம்பு அதிகரிக்க பட்டு உள்ளது. இதனால் 3 கோடி பேர் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் பிரசவ விடுப்பு.மீனவர்களின் நலனுக்காக மீன் வளத்துறை என தனி அமைச்சகம் அறிவிக்கப்படும். ஒரு கோடி இளைய தலைமுறையினருக்கு திறன் பயிற்சி வழங்கப்படும். முத்ரா யோஜனா திட்டத்தி்ல் ஏழு கோடி கடன் உதவி வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் கிராமங்கள் நவீனமயமாக்கபடும். இரயில்வே துறை வருமானம் 12 இலட்சம் கோடியை தாண்டி உள்ளது. நாடோடிகளாக வாழும் மக்களுக்கு என தனி நலவாரியம் அமைக்கப்படும். வரி வருவாய்யும் 12 இலட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

பி எப் சந்தாதாரர்கள் உயிர் இழந்தால் வழங்கப்படும் தொகை 3 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக உயர்வு செய்யபட்டு உள்ளது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker