நவீனப்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, இரு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அவை 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி வெற்றிகரமாக அடைந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இலக்கை குறி வைத்து வழிநடத்தும் தொழில் நுட்பம் கொண்ட பினாகா ராக்கெட்கள், அதற்கான ஏவு எந்திரத்தில் இருந்து ஏவப்படக்கூடியவை. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை இந்திய ராணுவ தளவாட ஆய்வகம் உருவாக்கி உள்ளது.
சிவபெருமானின் வில்லான பினாகத்தை குறிக்கும் வகையில் பினாகா என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டுகள் தான் கார்கில் போரில் பாகிஸ்தான் படைகள் புறமுதுகிட்டு ஓட வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பினாகா ராக்கெட் சோதனை வெற்றி
