பிஜேபி, மதிமுக இடையே மோதல்?

இன்று கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்ட போவதாக மதிமுக தலைவர் வைகோ ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காவல் கிணறு என்ற இடத்தில் வைகோ மற்றும் அவரது கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் கற்களை வீசியதால் மதிமுக மற்றும் பிஜேபி தரப்பினர்க்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வைகோ கைது செய்யபட்டு காவல் துறையினரால் அழைத்து செல்லபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *