பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று வழங்கப்படும் என, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் அனுபம் வஸ்தவா தெரிவித்துள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லில் 36 தொலை தொடர்பு மாநிலங்கள் உள்ளன. இதில் 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று வழங்கப்படும். உரிய நேரத்தில் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைத்த தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு நன்றி என அனுபம் வஸ்தவா கூறியுள்ளார்.