பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் கவிழ்ந்து விபத்து!

வங்கதேசத்தில் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்த பலம் இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் 100 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, பாலம் இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த ரயில் விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில், ஒரு பெட்டி மட்டும் கால்வாய் தண்ணீருக்குள் விழுந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் மீட்பு படையினரும் இணைந்து பொதுமக்களும் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் மீட்டனர் என காவல் கண்காணிப்பாளர் ரஷீதுல் ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள 21 பேர் சைல்ஹெட் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படனர். இதைத்தொடர்ந்து, தாகாவிலிருந்து வங்கதேசம் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள மோசமாக சிக்னல் மற்றும் தடவழிப்பாதை காரணமாக, அங்கு ரயில் விபத்து என்பது சாதாரணமான விஷயமாக நடந்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *