பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவி உண்டா?

அதிமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும்  மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக  பாமகவுக்கு  தருமபுரி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர்  ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளன.  தமாகாவை  கூட்டணியில் சேர்க்க அதிமுக தலைமை முயற்சி எடுத்து வருவதால், மற்ற 3 தொகுதிகள் உறுதிசெய்யப்படவில்லை.

இதற்கிடையில்,  தேர்தல் பணிகளை பாமகவினர்  தொடங்கிவிட்டனர்.  மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுடன்  சட்டப்பேரவை  தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆலோசனை  நடத்தி  வருகின்றனர்.  இதுபற்றி  பாமக  மூத்த நிர்வாகிகளிடம்   பேசியபோது,  “மக்களவைத்  தேர்தலுக்கான பணிகளை  முழு  வீச்சில்  தொடங்கிவிட்டோம் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி ?பெறும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  7  தொகுதிகளில்  4 தொகுதிகளில்  வெற்றி  பெற்றால் ஒரு மத்திய அமைச்சர் பதவி தருவதாக  பாஜக  உறுதி  அளித்துள்ளது எனவும் தெரிவித்து உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *