
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்திரிக்கையாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். செய்தியாளர்கள் பலருக்கு குறைந்த ஊதியமே கிடைப்பதாகவும், அதிக நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த மதுரை நீதி மன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என கூறியுள்ளனர்.