பாக்ஸிங் டே போட்டியில் வெல்ல போவது யார்?

கிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடர் 1-1  என சமனில் உள்ள நிலையில் நாளை  பாரம்பரியம் மிக்க மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. கிறிஸ்மஸ்க்கு அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த போட்டி ஏற்படுத்தி உள்ளது.

கடைசியாக நடந்த 10 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் 6 இல் வெற்றியும் 2 இல் டிராவும் செய்து உள்ளது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து உள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்தது,2 இல் டிராவும் செய்து 1978,1981 ஆம் ஆண்டுகளில் வெற்றியும் பெற்று உள்ளது.

கடைசியாக 2014 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா செய்தது. அந்த போட்டியில் ஒரே இன்னிங்ஸில் சதம் அடித்த கோஹ்லி, ரஹானே ஜோடி 262 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் அலெக்டர் குக் 244 ரன்கள் அடித்தார்.

அந்த டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது குறிப்பிடதக்கது. நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் இந்தியா 200 ரன்களை கடக்கவில்லை.

நாளை காலை 5 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஹேன்ட் கேம்ப் நீக்கபட்டு மிட்ஷில் மார்ஷ் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் விஜய், ராகுல, உமேஷ் யாதவ் நீக்கபட்டு மயங்க் அகர்வால், ஜடேஜா, ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ஹனுமா விஹாரி,மயங்க் அகர்வால்,சட்டீஸ்வர் புஜாரா,விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே,  ரோஹித் சர்மா, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *