பாகிஸ்தான் மீண்டும் சேஸிங்கில் இலக்கை எட்டமுடியாமல் தோற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. வார்னர் மற்றும் பின்ச்சின் அதிரடியான ஆட்டத்துக்கு பின்பு ஆட்டத்தை பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் ஆமிர்.
10 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் பேட்டிங்கின் போது 136/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 11 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாட்டை கண்ட பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விரக்தியோடு முகத்தை திருப்பி கொண்டார். இந்த காட்சி இணையத்தில் வைரலானது.
இதனை ஐசிசி ட்விட்டர் பக்கமே பகிர்ந்திருந்தது. பாகிஸ்தானின் பேட்டிங் சரிவால் ஆன விரக்தியில் அந்த ரசிகர் அப்படி செய்துள்ளார்.