பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் இந்திய விமானப்படை சார்பில் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானங்கள் இந்திய விமானப்படை விமானங்களால் விரட்டி அடிக்கப்பட்டன. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படை விமானங்கள் எல்லைப் பகுதிகளில் அதிவேகத்தில் பறந்து ஆயத்தமாக இருப்பதை வெளிப்படுத்தின. பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்பதால் அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி?
