பாகிஸ்தான் அணியும், நியுசிலாந்து அணியும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன.
மூன்றாவது போட்டியில் முதல் இன்னிக்சில் நியுசிலாந்து அணி 274 ரன்கள் எடுத்தது. அடுத்து இன்னிக்சை துவங்கிய பாகிஸ்தான் அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸார் அலி 134 ரன்களும், சூஸாத் ஷஃயக் 104 ரன்களும் எடுத்தனர்.
நியுசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியட்சன் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்.