ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது.
காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.