சேலம் எட்டு வழிசாலை வழக்கை விசாரித்த ஐகோர்ட் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன் வைத்த கோரிக்கையை கூட ஏற்க மறுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்து கொண்ட பிறகு அதை பற்றி பேசுவதையே தவிர்த்தார். ஆனால் விவசாயிகளை ஐகோர்ட் காப்பாற்றி உள்ளது. விவசாயிகள் பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மக்களின் உணர்வுகளை மதிக்காத பழனிசாமி அரசுக்கு மரணஅடி கிடைத்து உள்ளது. மக்களை கொடுமை படுத்திய எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யமாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி உடனே அறிவிக்கவேண்டும் என கூறியுள்ளார்.