பரியேறும் பெருமாள் BABL விமர்சனம்ப.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்தான் பரியேறும் பெருமாள் BABL
திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசு சட்ட கல்லூரிக்கு படிக்க வரும் தாழ்த்தபட்ட பிரிவை சேர்ந்த ஒரு மாணவன் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மயக்கதை.2005 ஆம் ஆண்டில் நடப்பது போல் பயணிக்கிறது படத்தின் கதை.
பரியேறும் பெருமாள் ஆக நடித்துள்ள கதிர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோதி மகாலட்சுமி ஆக வரும் ஆனந்தியும் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்து உள்ளார். தாத்தாவாக வரும் கராத்தே வெங்கடேசன், பூ ராம்,யோகி பாபு, மாரிமுத்து ஆகியோரின் கதாபாத்திரங்களும் படம் முடிந்து வெளியே வரும் போது மனதில் நிற்கின்றன.
பாடல்களும், சந்தோஷ் நாராயணன் இசையும் கதையோடு ஒன்றி வருகிறது. படம் ஆரம்பித்து 5 நிமிடங்களில் கதையோட்டம் தெரிந்து விடுவது படத்தின் குறையாகும். படத்தின் கிளைமாக்ஸ் வழக்கமான படங்களை போல் அல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ப.ரஞ்சித்ன் கருத்துகள் படத்தில் சிதறி கிடக்கின்றன.