பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கல்பட்டுகான ட்ரெயின் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளது!

சென்னை எழும்பூர்- விழுப்புரம் பிரிவில், தாம்பரம் -வண்டலூர் இடையே பராமரிப்பு பொறியியல் பணி நடப்பதால் ஜூன் 3 முதல் 9-ம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு ஜூன் 6,7,8 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.02 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம் -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை -தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு ஜூன் 3.4,6,7 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.15மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு -தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை -தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு ஜூன் 9 தேதி நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரை -தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு ஜூன் 5 தேதி 12.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு -தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம் -சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு ஜூன் 3,9 ஆகிய தேதிகளில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு -தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இது தவிர மேலும் 3 மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *