காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 41 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பலியாகினர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தற்போது இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர் யாருடைய தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்து விசாரணை செய்ய விரும்பினால் அதை செய்ய நாங்கள் தயார். அதற்கான தகுந்த ஆதாரங்களை கொடுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார். அதை தவிர்த்து பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்க நீங்கள் நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.
பதிலடி கொடுக்க தயார் _ இம்ரான்கான்
