பதவி ஏற்றார் கே.சந்திரசேகர் ராவ்

தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடந்தது, கடந்த 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா கட்சி 88 இடங்களை கைப்பற்றியது.

அதற்காக ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கே.சந்திரசேகர் ராவ்வுக்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது  கே.சந்திரசேகர் ராவ்வுக்கு இரண்டாவது முறையாகும்.

அமைச்சரவை விரிவுபடுத்துவது குறித்து அடுத்தகட்டமாக முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பார். 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தெலுங்கானா ராஷ் சமிதி கட்சி அதிக 63 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 88 இடங்களில் வென்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *